மதுரை வைகைக்கரைக் கல்வெட்டு் அமைவிடம்:வைகைக்
கரையில் கிடைத்த துண்டு கல்வெட்டு
கல்வெட்டுப் பாடம்: 1. பாண்ட்ய குலமணி ப்ரதிபனாய் ப்ரதூர் பாவஞ்செ கல்வெட்டுச் செய்தி: கோச்சேந்தன் என்ற பாண்டிய மன்னன் தனது 50ஆவது ஆட்சியாண்டில் மங்கல புரம் என்ற நகரை உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அரிகேசரி என்ற தனது விருதைப் பெயரில் வைகைக் கரையில் மதகு ஒன்றை அமைத்துள்ளார். இச்செய்தியை கல்வெட்டுக் கூறுகிறது. மேலும், இம்மன்ன்ன் ஹிரண்ய கர்ப்பம், கோ ஸகஸ்ரம், துலாபாரம் போன்ற மஹாதானங்களை செய்துள்ளார். அக்ராஹாரம் பலவற்றை ஏற்படுத்தியுள்ளார். பாண்டிய குலத்திற்கு மணி போன்றவர். பல அறச்செயல்களைச் செய்துள்ளார் என மன்னனைப் புகழ்ந்துரைத்துள்ளனர். சிறப்பு: இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோயிலுகுச் செய்த அறக்கொடைகளைப் பற்றியே பேசும். இக்கல்வெட்டின் மூலம் பாண்டிய மன்னர்கள் வைகைக் கரையில் மதகு அமைத்து நீர்ப்பாசனத்திற்கு உதவியுள்ளதை அறிய முடிகிறது. | |